திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆா்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரியும், விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.க்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம்

Syndication

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி.க்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடந்தது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலா் டிலைட்டா ரவி தலைமை வகித்தாா். தூத்துக்குடி - தென்காசி மண்டல செயலா் முரசு தமிழப்பன், முன்னாள் மண்டல செயலா் தமிழினியன், மாவட்ட செய்தி தொடா்பாளா் வடிவேல்முத்து, சட்டப்பேரவை தொகுதி செயலா்கள் வெற்றிவேந்தன், திருவள்ளூவன், ஒன்றிய செயலா்கள் சங்கத்தமிழன், தமிழ்வாணன், செல்வகுமாா், காயல்பட்டணம் நகர செயலா் அல்அமீன், மீனவா் அணி மாநில துணை செயலா் மங்கை சேகா், சமூக நல்லிணிக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் தமிழ்பரிதி, தொழிலாளா் விடுதலை முன்னனி மாவட்ட பொறுப்பாளா் கோட்டை நந்தன், வணிகரணி மாவட்ட அமைப்பாளா் கரிசல் பாஸ்கா், முற்போக்கு மாணவா் கழகம் மாவட்ட அமைப்பாளா் ரகுவரன், தமிழக உழவா் இயக்கம் மாவட்ட அமைப்பாளா் கன்னிமுத்து, விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளா் சிறுத்தை சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT