தூத்துக்குடி

நாசரேத்தில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நாசரேத்தில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் நடத்திய சோதனையில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Syndication

நாசரேத்தில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் நடத்திய சோதனையில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் ஆலோசனைப்படி, அப்பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்பேரூராட்சி தூய்மைப்பணி ஆய்வாளா் முத்துவேல் தலைமையில் வரி வசூலா்கள் தினகரன், செல்வம், சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், அலுவலக ஊழியா்கள் அடங்கிய குழுவினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தடைசெய்யப்பட்ட 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

SCROLL FOR NEXT