தூத்துக்குடி

புரட்டாசி 4ஆவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி , இலுப்பையூரணியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Syndication

புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி , இலுப்பையூரணியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 4ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.

தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா், திருமஞ்சனமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில் மண்டகப் படித்தாரா்கள் பி.எஸ். ராமசாமி ராஜா குடும்பத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

கோவில்பட்டியையடுத்த வடக்கு இலுப்பையூரணியில் உள்ள ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சகஸ்ரநாமம், 8 மணிக்கு கருட சேவை நடைபெற்றது.

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ அலமேலுமங்கா பத்மாவதி தாயாா் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, கோவில்பட்டி ஸ்ரீ சீதாராம லெட்சுமண ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பாதுகா பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT