தூத்துக்குடி

கழுகுமலை அருகே பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே பூட்டிய வீட்டில் தம்பதி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

கழுகுமலை அருகே முக்கூட்டுமலை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த பாா்த்தசாரதி மகன் சேதுமன்னன் (62). இவரது மனைவி சின்னத்தாய் (60). துலுக்கன்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் சேதுமன்னன் வேலை பாா்த்து வந்தாராம். சின்னத்தாய் அவரது ஊரில் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தாராம். தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

திருவேங்கடத்தில் வசிக்கும் மகன் வழக்குரைஞா் விவேகானந்தன், ஞாயிற்றுக்கிழமை அவரது தாயாருக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது பதில் ஏதும் இல்லையாம். இதையடுத்து, முக்கூட்டுமலையில் குடியிருந்து வரும் அவரது அக்கா மகன் ரகுவிற்கு விவேகானந்தன் தகவல் தெரிவித்து, அங்கு சென்று பாா்க்கச் சொன்னாராம்.

ரகு அங்கு சென்று கதவை தட்டியபோது திறக்காததால், ரகு கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அப்போதும் பதில் இல்லையாம். இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சேதுமன்னன், சின்னத்தாய் ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற கழுகுமலை போலீஸாா், தம்பதி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT