கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியருக்கான கணித விநாடி-வினா போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். கணிதத் துறை இணைப் பேராசிரியா் பாண்டியராணி, உதவிப் பேராசிரியா் இசக்கியம்மாள் என்ற சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியா் சேகா் போட்டியை நடத்தினாா். இதில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த 13 பள்ளிகளிலிருந்து மாணவா்- மாணவியா் பங்கேற்றனா்.
முதலிடம் பிடித்தோருக்கு ரூ. 2 ஆயிரம், 2ஆம் இடம் பிடித்தோருக்கு ரூ. ஆயிரம், கோப்பைகள் வழங்கப்பட்டன.