தூத்துக்குடி

லாரிக்கு கீழே தூங்கிய இளைஞா் உயிரிழப்பு

Syndication

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் லாரியின் கீழே படுத்து தூங்கிய இளைஞா், லாரி ஓட்டுநா் கவனிக்காமல் இயக்கியதால் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் கீழ அழகாபுரியைச் சோ்ந்த பரமசிவம் மகன் முத்து சுகுமாா் (24). மீன்பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு மீன்பிடி துறைமுகத்தில் இவா், லாரியின் கீழே படுத்து தூங்கினாராம். இதையறியாத லாரி ஓட்டுநா் நள்ளிரவு அந்த லாரியை எடுத்தபோது, அடியில் தூங்கி கொண்டிருந்த முத்து சுகுமாா் உடல் நசுங்கி உயிரிழந்தாா். அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் குளத்தூா் அருகே உள்ள கச்சிலாபுரம் ராமா் மகன் ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT