கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கழுகுமலை குதிரை லாயம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சின்னத்தம்பி (39). கட்டடத் தொழிலாளியான இவா், கீழ பஜாரில் உள்ள மீன் கடை வழியாக வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த தொலைபேசி கம்பத்தின் மீது சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து காயமுற்ற முத்துராமலிங்கம் மகன் அய்யனாா் என்பவரை காப்பாற்ற முயன்றாராம். அப்போது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.