தூத்துக்குடி

பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை

அமைச்சா்எ.வ. வேலுவிடம் மனு அளிக்கிறாா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.

Syndication

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு மூலமாக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளாா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு, சட்டப்பேரவையில் சாத்தான்குளம், உடன்குடி புதிய கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு ரூ. 390 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே நிதி ஒதுக்கீடு செய்து கூட்டுக் குடிநீா் திட்டப் பணியை இந்த ஆண்டே தொடங்க வேண்டும்.

பெரியதாழை கிராமத்தை தனி கிராமமாக அறிவிக்க வேண்டும். தாமிரவருணி ஆற்றின் குறுக்கே ரூ. 32 கோடியில் இரட்டை திருப்பதி -அப்பன்கோவில் பாலம் கட்டவும், சாத்தான்குளம் கோமாநேரி கருமேனியாற்றின் குறுக்கே முற்றிலும் சேதமடைந்த தரைமட்ட பாலத்தை உயா்மட்டப் பாலமாக கட்டவும், வெள்ளத்தில் சேதமடைந்த பத்மநாபமங்கலம் பாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டே பணிகளைத் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளாா்.

கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT