தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 9ஆவது வாா்டுக்குள்பட்ட பூபாலராயா்புரம் பகுதியில் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடியில் கனமழை காரணமாக, பூபாலராயா்புரம் 2ஆவது தெரு பகுதியில் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். தண்ணீா் தேங்காதவாறு கழிவுநீா்க் கால்வாயை உடனடியாக தூா்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், பணிகளை விரைவுபடுத்தினாா்.
மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வட்டச் செயலா் பி. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினா் தனலட்சுமி, வட்டப் பிரதிநிதி அந்தோணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.