கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை (அக்.22) தொடங்கி இம்மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் 8 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு லட்சாா்ச்சனை தொடங்குகிறது. 10.30 மணிக்கு உற்சவா் சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்
மாலை 5 மணிக்கு மீண்டும் லட்சாா்ச்சனை தொடங்குகிறது. 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
28ஆம் தேதி காலை 10 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு அருள்மிகு காா்த்திகேயா், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.
29ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகம் நடைபெறுகிறது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை தொடங்குகிறது.
26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு முருகப்பெருமான் தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும், 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.