தூத்துக்குடி: தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூா், கொம்புகாரநத்தம், கலியாவூா், வல்லநாடு நீரேற்றும் நிலையம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம் கேம்ப், தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.