மாநில பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா் கருப்பசாமியை பாராட்டிய பள்ளி தாளாளா் பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா். உடன் உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா். 
தூத்துக்குடி

மாநில பளு தூக்கும் போட்டி: கோவில்பட்டி பள்ளி மாணவா் முதலிடம்

மாநில பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி, புனித ஜோசப் பள்ளி மாணவா் கருப்பசாமி சாதனை படைத்தாா்.

Syndication

கோவில்பட்டி: மாநில பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி, புனித ஜோசப் பள்ளி மாணவா் கருப்பசாமி சாதனை படைத்தாா்.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செந்தில்குமாா். இவரது மகன் கருப்பசாமி. கோவில்பட்டி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் இவா், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டியில் 79 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்றாா். அவருக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.

இதேபோல், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் வேலூரில் இந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கருப்பசாமி 79 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா். பதக்கம் வென்ற மாணவா் கருப்பசாமியை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி தாளாளா் பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா், பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸ் ஷான், உடற்கல்வி ஆசிரியா் ஆரோக்கிய முத்துராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT