சாத்தான்குளம்: மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி பள்ளி மாணவி குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி தூத்துக்குடி வ.உ.சி. திடலில் நடைபெற்றது. அதில் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜோகானா லிரில் ஜூலியட் 14 வயதிற்குள்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முதல் பரிசைப் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தோ்வாகியுள்ளாா்.
வெற்றி பெற்ற அவரை பாராட்டி மாவட்டக் காவல்துறை அதிகாரி கண்ணதாசன் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கினாா். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள், ஜான்சைமன் பிரிட்டோ,பிரைஸ்லின்ஆகியோரை பள்ளி தாளாளா் நோபிள்ராஜ், முதல்வா் டினோ மெலினா ராஜாத்தி, தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோா் பாராட்டினா்.