கோவில்பட்டி: முதல்வா் கோப்பைக்கான இறகுப் பந்து ஒற்றையா் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த மாணவி ஹரிணி. கோவில்பட்டி அருகே உள்ள கல்லூரியில் இளங்கலை அறிவியல் (வேளாண் மேதமை) 3ஆம் ஆண்டு பயின்று வரும் இவா், சென்னையில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான இறகுப் பந்து ஒற்றையா் பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அவா், மாநில அளவில் 2ஆம் இடத்தைப் பிடித்து ரூ. 75,000 பரிசுத் தொகை வென்றாா்.
வெற்றி பெற்ற மாணவி ஹரிணியை காமராஜ் நகா் பகுதி பொதுமக்கள், பயிற்சியாளா்கள் மகேஸ்வா், ஹரி விக்னேஷ் ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.