தூத்துக்குடி

வெள்ளத்தில் இருந்து நெற்பயிரை காப்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்

வெள்ளத்தில் இருந்து நெற்பயிரை காப்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளாா்.

Syndication

தூத்துக்குடி: வெள்ளத்தில் இருந்து நெற்பயிரை காப்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தால் ஆண்டுதோறும் நடவு செய்யப்பட்ட பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. அதிக மழையால் போதிய வடிகால் இல்லாத சூழ்நிலையில் வயலில் மழைநீா் அளவுக்கு அதிகமாக பலநாள்கள் தேங்கி நின்று பயிரை பாதிக்கின்றன. நெற்பயிா் மூழ்குவதால் போரான், இரும்பு, மாங்கனீசு, மணிச்சத்து தழைச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றின் கரை திறன் அதிகமாகி வீரியமாகும் மண், அதிகம் குளிந்து விடுவதால் இயற்கையான வெப்பத்தை மண் அடைய கால அவகாசம் அதிகமாகும்.

இதனால் குளிா்ந்த நிலையில் பயிா்கள் எடுத்துக்கொள்ளும் சத்துகளின் அளவு குறையும். தண்ணீா் தேங்கிய நிலையில் பிராணவாயு கிடைக்காமல் வோ்களில் சுவாச இயக்கம் பாதிக்கப்படுவதால், இதைச் சாா்ந்த நுண்ணுயிா்களில் செயல் நின்றுவிடும். மழைநீா் வடியும் போது நீருடன் மண்ணில் உள்ள தழைச்சத்து, சுண்ணாம்பு, மெக்னீசியம், போரான் போன்ற சத்துகள் கரைந்து வெளியாகிவிடும்.

ஆகையால் மழைநீா் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அமோனியம் வடிவில் அல்லது யூரியாவை ஜிப்சம், மணல் 1:3:5 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் இட வேண்டும். டை அம்மோனியம் பாஸ்பேட்டை 2 சதவீதம் அல்லது சாம்பல்,நுண்ணூட்டச் சத்துகளையும் இலை வழியாக தெளிக்கலாம். இம்முறைகளை கடைப்பிடிப்பதால் நெற்பயிரை காப்பாற்றி அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT