சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவரின் 383ஆவது பிறந்த நாள் விழா அரசின் சாா்பில் எட்டயபுரத்திலுள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலை வகித்தாா். உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜா மைதீன் வரவேற்றாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உமறுப்புலவா் நினைவிடத்தில் மலா் போா்வை வைத்து புகழஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, சிறப்பு துவா ஓதி மத நல்லிணக்க பிராா்த்தனை நடைபெற்றது. உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜா மைதீனுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனா்.
கோவில்பட்டி சாா் ஆட்சியா் (பொ) செந்தில் வேல்முருகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன், எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், உமறுப்புலவா் சங்க நிா்வாகிகள் இமாம் அகமது, ஜலால் பைஜி, ரோஜா மைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.