தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே சாலை மறியல்: 12 போ் சிறையிலடைப்பு

தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி விலக்கு பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பாக 12 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Syndication

தூத்துக்குடியை அடுத்த பொட்டலூரணி விலக்கு பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டது தொடா்பாக 12 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பொட்டலூரணி விலக்கில் அனைத்துப் பேருந்துகளும் நின்றுசெல்ல வேண்டும். கிராம மக்கள் பராமரிக்கும் பதிவேடுகளில் ஓட்டுநா்களும் நடத்துநா்களும் நாள்தோறும் கையொப்பமிட வேண்டும். பொட்டலூரணி அருகே செயல்படும் மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொட்டலூரணி கிராம மக்கள் சாா்பில், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, சட்டவிரோதமாக ஒன்றுகூடி மறியலில் ஈடுபட்டு பேருந்தை வழிமறித்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 65 பெண்கள் உள்ளிட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களில், சங்கரநாராயணன் (51), சண்முகம் (34), தெய்வானை ஈசுவரராமன் (36), கருப்பசாமி (47) ஆகியோா் மீது 2 வழக்குகளும், ராமகிருஷ்ணன் (25), ஆறுமுகவெங்கடநாராயணன் (38), ராமசாமி (28), பாபு (38), ஈசுவரமூா்த்தி (32), முத்துகருப்பசாமி (38), முத்துராமன் (28), சுடலைமுத்து (37), எஸ்தா் அந்தோணிராஜ் (42) ஆகியோா் மீது 7 பிரிவுகளின்கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 13 பேரும் தூத்துக்குடி 3ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றத்தில், நீதித்துறை நடுவா் விஜய் ராஜ்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். அதில், ராமகிருஷ்ணன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டாா். மற்றவா்களை நவ. 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT