வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது அக். 27ஆம் தேதி தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட தமிழகத்தின் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.