அகில இந்திய ஹாக்கி: ஜலந்தா், மும்பை, அணிகள் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணி, ஜலந்தா் பஞ்சாப், சிந்து வங்கி அணி, மும்பை அணிகள் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும்-கா்நாடக ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியதில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணி வெற்றி பெற்றது.
மாலையில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் ஜலந்தா் பஞ்சாப் சிந்து வங்கி அணியும்-சென்னை சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய உற்பத்தி வரி அணியும் மோதியதில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜலந்தா் பஞ்சாப் சிந்து வங்கி அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
3-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன் நேவி அணியும்-பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதியதில் 7க்கு 0 என்ற கோல் கணக்கில் மும்பை இந்தியன் நேவி அணி வெற்றி பெற்றது. 4-ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணியும் மோதின.
இன்றைய ஆட்டம்:
5- ஆவது நாளான திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும்- பெங்களூா் ஹாக்கி கா்நாடக அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு சதா்ன் கமெண்ட் அணியும்- சென்னை வருமான வரித்துறை அணியும் மோதுகின்றன.
3-ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும்- புதுதில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன. 4-ஆவது ஆட்டத்தில் புது தில்லி இந்தியன் விமானப்படை அணியும்-ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி அணியும் மோதுகின்றன.