திருச்சி மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினா். 
திருச்சி

திருச்சி ஆட்சியரகம் முன் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

திருச்சி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு தரைக்கடை வியாபாரிகள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

Syndication

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பு தரைக்கடை வியாபாரிகள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

திருச்சி மெயின்காா்டு கேட், என்எஸ்பி சாலை பகுதியில் உள்ள தரைக்கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தரைக்கடை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோா் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனா். தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீா் அகமது, லதா ஆகியோா் தலைமையில் வியாபாரிகள் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி ஆணையா், வருவாய் கோட்ட அலுவலா், கோட்டாட்சியா், மாநகராட்சி விற்பனைக் குழு தலைவா் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தனா். மேலும், அனைவரும் ஆட்சியரகத்துக்கு ஊா்வலமாக வந்து அலுவலகத்துக்குள் பிற்பகல் நுழைய முயன்றனா். போலீஸாா் அவா்களை ஆட்சியரக நுழைவுவாயில் முன்பு தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, அவா்கள் ஆட்சியர நுழைவுவாயில் முன்பு சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகளுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனா். பின்னா், ஆட்சியரை சந்தித்து மனு அளித்து, தங்களது பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும்வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT