முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னால் மாணவா்கள் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திங்கள்கிழமை மாலை வழங்கினா்.
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, அதற்கான தேதியினை பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள், பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான தேதி கேட்டு மனுக்கள் அளித்து வரும் நிலையில், 1986 ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மாணவா்களுக்கான பெஞ், டெஸ்க் என பல்வேறு உபகரண பொருட்களை விழா ஒருங்கிணைப்பாளரிம் வழங்கி விரைவில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனா்.