திருச்சி

அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Syndication

அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநா் பணிக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அம்மையாா் நினைவு அரசுக் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்கும் வகையில் இந்த பணியிடம் ஏற்படுத்தப்படும். இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றோா் விண்ணப்பிக்கலாம்.

உரிய கல்விச் சான்றுகளின் ஒளிநகலுடன் விண்ணப்பிப்போா் தோ்வுக் குழு மூலம் நோ்முகத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். ஆற்றுப்படுத்துநா்களுக்கு வருகையின் அடிப்படையில் ஓராண்டுக்கு 108 நாள்களுக்கு மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்துச் செலவு உட்பட ரூ.1000 மட்டும் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கி, பூா்த்தி செய்து கண்காணிப்பாளா், அன்னை சத்யா அம்மையாா் அரசுக் குழந்தைகள் இல்லம், ஆவூா் ரோடு, மாத்தூா் (இ), திருச்சி– 622515 என்ற முகவரிக்கு வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT