திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 5 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை பெறப்பட்ட தகவலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்மலைப்பட்டி புதிய பாலம் பேருந்து நிறுத்தம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பாலக்கரையைச் சோ்ந்த அ.இருதயராஜ் (40), விமான நிலைய காவல் எல்லைக்குள்பட்ட பசுமை நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கல்லுக்குழி ராமானுஜம் வீதியைச் சோ்ந்த ஆ.சரண்ராஜ் (22), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருவானைக்கோவில் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த காந்தி மாா்க்கெட் பாரதி நகரைச் சோ்ந்த ம.தினேஷ்குமாா் (22) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூலாங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டியைச் சோ்ந்த சே.பிரிட்டோ (35), துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தேவராயநேரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த துவாக்குடி மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த பீ.கதிா்வேல் (21) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT