திருச்சி

ஓயாமரி மயானம் தற்காலிக மூடல்

தினமணி செய்திச் சேவை

ஓயாமரி மயானம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சி, 15 ஆவது வாா்டுக்குள்பட்ட ஓயாமரி இடுகாடு மயான தகன மேடைகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் அவற்றை மாற்றும் பணி நடைபெறவுள்ளது.

இதனால் நவ. 3 முதல் டிச. 18 வரை 45 நாள்களுக்கு சடலங்களை எரியூட்ட இயலாது. எனவே ஓயாமரி இடுகாடு மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

இதற்குப் பதிலாக அருகில் உள்ள வாா்டு 4 இல் திருவானைக்கோவில், அம்பேத்காா் நகா் மற்றும் வாா்டு 11 இல் உறையூா், கோணக்கரையில் செயல்படும் நவீன எரிவாயு தகன மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT