பொன்னுச்சாமி. 
திருச்சி

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மின்வாரிய கம்பியாளா் மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பேச்சங்கம்பட்டியை சோ்ந்தவா் ராசன் மகன் பொன்னுச்சாமி (49). இவா் வையம்பட்டி மின்வாரியத்தில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு மேலாக கம்பியாளராக இருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியை சனிக்கிழமை அதிகாலை காணவில்லை.

அவரை குடும்பத்தினா் தேடி வந்த நிலையில் வீட்டருகேயுள்ள மின் மாற்றி ஒன்றில் மின்சாரம் பாய்ந்த நிலையில் பொன்னுச்சாமி சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் பொன்னுச்சாமி உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்னுச்சாமி மின் பழுதுகளை நீக்க மின்மாற்றியில் ஏறினாரா என்பது குறித்து வையம்பட்டி மின்வாரிய அதிகாரிகளும் விசாரிக்கின்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT