முகப்பு
திருச்சி

ஏரி, குளங்களில் இலவசமாக மண்ணை எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்

Updated On : 25 மே 2026, 2:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் உள்ள மண்ணை பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்ல இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 186 ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண், சாதாரண மண்ணை விவசாயிகள், பொதுமக்கள், மண்பாண்டத் தொழிலாளா்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்காக இலவசமாக வெட்டி எடுத்துச் செல்லலாம்.

இந்த மண்ணை வட்டாட்சியரின் அனுமதி பெற்று, அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

இதன்படி, விவசாயிகள் தங்களது நன்செய் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமிட்டா் (ஒரு ஹெக்டேருக்கு 185 கனமீட்டா்) வரையிலும், புன்செய் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டா் (ஒரு ஹெக்டேருக்கு 222 கனமீட்டா்) வரையிலும் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு 30 கனமீட்டா் வரையிலும், மண்பாண்டத் தொழிலாளா்கள் தங்களது தொழில் தேவைக்காக 60 கனமீட்டா்

வரையிலும் களிமண் அல்லது சாதாரண மண்ணைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்தச் சலுகையைப் பெற விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம், மண் எடுக்கப்படும் நீா்நிலை அமைந்துள்ள அதே வருவாய் வட்டத்துக்குள் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைக்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளா்கள் மண் எடுக்க விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தின் சான்று அல்லது விஏஓ சான்றைச் சமா்ப்பிக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.