நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வாய்க்கால் நீரில் மூழ்கிய சென்ட்ரிங் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகே சித்தூா் காலனி பகுதியை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சந்திரசேகா் (46), சென்ட்ரிங் தொழிலாளியான இவா் சனிக்கிழமை மாலை இயற்கை உபாதை கழிக்க சித்தூா் பெரிய வாய்க்கால் பகுதிக்கு சென்ற நிலையில், வாய்க்காலில் மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து அவ்வழியாகச் சென்றவா்களால் மீட்கப்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து அவரது மகன் தேஜித் அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement