அரியலூர்

பிசி, எம்பிசியினருக்கு தொழில் தொடங்கக் கடனுதவி

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுயதொழில்

DIN

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்குவதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்-கோ) மூலம் தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் தொழிற்கடன், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு கடன், கறவை மாடுகள் வாங்கக் கடனுதவி பெற விரும்புவோர், அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன் பெறலாம். 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புறமாயின் ஆண்டு வருமானம் ரூ. 81 ஆயிரத்துக்குட்பட்டும், நகர்ப்புறமாயின் ரூ. 1.3 லட்சத்துக்குட்பட்டும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT