அரியலூர்

இட தகராறில் இளைஞருக்கு கத்தி குத்து

செந்துறை அருகே இடத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

DIN

செந்துறை அருகே இடத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் முத்துசாமி (33). செவ்வாய்க்கிழமை இவர், நில  அளவையரை அழைத்து வந்து, தனது வீட்டு மனையை அளந்த போது,
இவரது வீட்டின் எதிரே வசிக்கும் அழகப்பன் மகன் கருணாநிதி (46) என்பவரின் வீட்டின் சர்வே கல் நகர்த்தப்பட்டு, பொது இடத்தில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முத்துசாமி, கருணாநிதியிடம், பொது இடத்தில் நகர்த்தப்பட்ட சர்வே கல்லை அகற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு கருணாநிதி மறுப்புத் தெரிவித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முத்துசாமியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், முத்துசாமியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து கருணாநிதியை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT