அரியலூர்

கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், பேரணி

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் எதிரே

DIN

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் எதிரே கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 28 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி பணியாற்றி வந்த கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் ஆற்றல் மிகு உறுதியான பதவி நிலை விருத்தி திட்டத்தை செயல்படுத்தியது.
இதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பதிவு உயர்வு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு கடந்த மாதம் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், ஆற்றல் மிகு உறுதியான பதவி நிலை விருத்தி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், திட்டத்தின் படி ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து முழுமையாக செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கால்நடை மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ஜெயபால், கோட்ட செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
பெரம்பலூரில்......
கால்நடைத் துறையில், மருத்துவர்கள் 25 ஆண்டுகள் ஒரே பதவி மற்றும் ஊதியத்தில் பணியாற்றும் அவல நிலையை மாற்றவும், அரசாணை 49-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி, அனைத்து கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த 29 மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் பேரணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பேரணிக்கு, கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலர் இளையராஜா தலைமை வகித்தார்.  கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்ட செயலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். புறநகர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பாலக்கரை வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த போராட்டத்தால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 39 கால்நடை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இல்லாததால், கால்நடை வளர்ப்போர் சிகிச்சை பெறமுடியால் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT