அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆவேரியில் காட்டாமணி செடிகள், கருவேல மரங்கள், ஆகாய தாமரை உள்ளிட்டவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தனியார் சங்கங்கள் இணைந்து தொடங்கிய இந்தப் பணியை வட்டாட்சியர் திருமாறன் தொடங்கிவைத்தார். பொறியாளர் சங்க நிர்வாகி மார்டின் தலைமை வகித்தார். கட்டட பொறியாளர் சங்க நிர்வாகி அன்புராஜ், ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்க நிர்வாகி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.மக்கள் விழிப்புணர்வு சேவை சங்கத் தலைவர் அண்ணாமலை, விஏஓ பொய்யாமொழி, கட்டட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.