அரியலூர்

நீட் தேர்வுக்கு எதிராக களத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அரியலூர் மாவட்டம் செந்துறையில் பள்ளி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.

DIN

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அரியலூர் மாவட்டம் செந்துறையில் பள்ளி மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.
அனிதாவின்  தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி செந்துறை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் வியாழக்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையில் அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 ஆவது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்...
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவ,மாணவிகள் 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
விடுமுறை அளித்த பிறகும் சுமார் 70 மாணவர்கள் இரவு,பகல் பாராமல் கொட்டும் மழையிலும் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
குழுமூரில்.....
அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் அனிதாவுடன் படித்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திரளான பொதுமக்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT