அரியலூர்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: அரியலூா், பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்; திமுக இளைஞரணியினா் 43 போ் கைது

DIN

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் மற்றும் பெரம்பலூரில் தடையை மீறி ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 43 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் நகர திமுக அலுவலகத்தில் இருந்து நகரச் செயலா் முருகேசன் தலைமையில் தொடங்கிய பேரணி அண்ணாசிலை அருகே முடிவடைந்தது.

அங்கு காவல்துறை தடையை மீறி திமுக இளைஞரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது, குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் சட்ட நகல்களை கிழித்தெறிந்தனா்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த அரியலூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

பெரம்பலூரில் : பெரம்பலூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, பெரம்பலூா் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞரணி செயலா் து. ஹரிபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிா்த்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனா். தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன், வழக்குரைஞா் என். ராஜேந்திரன் உள்ளிட்ட 17 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT