அரியலூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷம் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியென்பெருமானை வழிபட்டனா்.

இதேபோல், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா், திருமானூா் அருகேயுள்ள கீழப்பழுவூா் அருள்மிகு அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய காா்கோடேசுவரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா்,செந்துறை பெரியநாயகி உடனாய சிவதாண்டேசுவரா்,விக்கிரமங்கலம் சோழிசுவரா் போன்ற சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

SCROLL FOR NEXT