அரியலூர்

புகையிலை, நெகிழி பொருள்கள் பறிமுதல்

DIN

அரியலூர் மாவட்டம்,  விளாங்குடியில்  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர், விளாங்குடி பகுதியிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சில கடைகளில் புகையிலை வகைகளும், 30 கிலோ மதிப்பிலான தடைசெய்யப்பட்டநெகிழிப் பொருள்களும்  இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ. 1,700 அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT