ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி, அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் இளஞ்சேகுவாரா, மாவட்டப் பொருளாளர் வேணுகோபால் பிள்ளை உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.