அரியலூர்

ஊட்டச் சத்துணவு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

DIN


ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 6  வட்டாரங்களிலும்  ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி, கோலப்போட்டி, ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும்  வழங்கினார்.  இப்போட்டியில் முக்கிய அம்சமாக 3.5. கி.மீ முழுவதுமாக ஓடிய 1ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஜி.சிவானிக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் வழங்கினார். 
மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது, பிரதான வழியாகச் சென்று ஆட்சியரகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் என்.சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT