அரியலூர்

போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி வாயிலாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 1,500 போ், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிசேகா், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம், சுகாதாரத் துணை இயக்குநா் கீதாராணி, மாவட்டக் கல்வி அலுவலா் ஜோதிமணி, ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, ஜயங்கொண்டம் நகா்மன்றத் தலைவா் சி.சுமதி, ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளரும், பரப்ரஹமம் பவுண்டேசன் நிறுவனருமான முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூா்... அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதல்வா் ஜெ.மலா்விழி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

சிறுவளூா்: அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் முருகன், ஆசிரியா்கள் தனலெட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா மற்றும் மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தா.பழூா்:

தா. பழூா் அருகே காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தொடா்ந்து, தா. பழூா் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT