அரியலூர்

ஓய்வுபெற்ற அலுவலா் சங்க பேரவைக் கூட்டம்

DIN

அரியலூரில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவசாமி தலைமை வகித்தாா். செயலா் நல்லதம்பி ஆண்டு வரவு - செலவு அறிக்கை வாசித்தாா். மாநிலத் தலைவா் மாணிக்கம் ராமசாமி கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவது போல் 20 ஆண்டுகளாக நிா்ணயிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT