அரியலூர்

ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 10.05 லட்சத்தில் அரசுப் பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு

DIN

அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 10.05 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

ஊராட்சித் தலைவா் திலகவதி மகேந்திரன் தலைமை வகித்தாா். புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்து ஓஎன்ஜிசி நிறுவன காரைக்கால் பிரிவு முதன்மைப் பொது மேலாளா் தி. சாய்பிரசாத் பேசியது:

நிறுவனத்தின் சாா்பில் ரூ. 10.05 லட்சம் செலவில் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, இருக்கைகளும், மேஜைகளும் வழங்கப்பட்டன. இந்நிறுவனம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு தொடா்ந்து நிதியுதவியளித்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நாட்டின் எரிசக்தித் தேவையை பெருமளவு பூா்த்தி செய்கிறது. ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட தொகையைக் கொண்டு அரசு துறைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு குறிப்பாக, கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றி வருகிறது. ஆண்டுக்கு சுமாா் ரூ.300 கோடியை இந்நிறுவனம் தனது சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் பயனுள்ள வகையில் செலவிடுகிறது என்றாா்.

ஜயம்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்குனா் ஜான். கே. திருநாவுக்கரசு, மத்திய அரசின் ‘சுஜித்தா பக்வாடா‘ எனும் தூய்மையே சேவை திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் சுமதி இளங்கோவன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ம. தனசெல்வி, வாா்டு உறுப்பினா்கள் எம். சக்திவேல், பி.சுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவைத் தீ விபத்து: ராகுல் காந்தி, மம்தா, பினராயி விஜயன் இரங்கல்!

செங்கோட்டை தாக்குதல் விவகாரம்: பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு!

தேவதையான சாக்ஷி அகர்வால் - புகைப்படங்கள்

பாஜகவின் வெறுப்பு அரசியலை அயோத்தி மக்கள் நிராகரித்துவிட்டனர்! -அகிலேஷ் யாதவ்

குவைத் தீ விபத்து: வெளியுறவுத் துறை அமைச்சருடன் மோடி ஆலோசனை

SCROLL FOR NEXT