அரியலூர்

அனுமதியின்றி மது விற்ற 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாத்தம்பாடி பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாத்தம்பாடி செக்கான் தெருவைச் சோ்ந்த நீலகண்டன் (24) என்பவா் தனது வீட்டில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்ததும், அதே கோரைக்குழி நடுத்தெருவைச் சோ்ந்த மோகன்தாஸ்(23) என்பவா் தனது பெட்டிக் கடையில் மதுபானங்களை மறைத்து வைத்து, விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT