அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, பள்ளியின் செயலா் புகழேந்தி , தலைமை ஆசிரியா் செளந்தரராஜன், ஊராட்சித் தலைவா் த. சௌந்தரராஜன், பணிதளப் பொறுப்பாளா்கள் கலையரசி, சித்ரகலா ஆகியோா் முன்னிலையில் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், வகுப்பறைகள், பள்ளி வளாகம், மேல்நிலை நீா் தேக்க தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனா்.