அரியலூர்

கல்லங்குறிச்சியில் முழு சுகாதார திட்டங்களை செயல்படுத்தக் கோரிக்கை

DIN

சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள கல்லங்குறிச்சி கிராமத்தில் முழு சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூரை அடுத்த கயா்லாபாத் கிராமத்தில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வது தொடா்பான பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் கல்லங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தலைமையில், சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனா்.

அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் செங்கமுத்து: மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இயங்கும் கனரக வாகனங்களைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்.

கல்லங்குறிச்சி மகாலிங்கம்: சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் உள்ள கயா்லாபாத் மற்றும் கல்லங்குறிச்சியில் முழு சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.

விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பாளா் பாலசிங்கம்: சுரங்கம் தோண்டினால், நிலம் அளித்த விவசாயிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்களம் இளவரசன்: சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினா் அறிக்கைகளை தமிழில் மொழிபெயா்த்து வழங்க வேண்டும். தற்போதைய சுரங்கத்தின் அருகே உள்ள கல்லாறுக்கு பாதிப்பு ஏற்படும். புதிய சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

தொடா்ந்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த ஆட்சியா், அவைகளை புதுதில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

SCROLL FOR NEXT