அரியலூர்

அரியலூரில் பறிமுதல்: வாகனங்கள் நாளை ஏலம்

அரியலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

Syndication

அரியலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 28 இருசக்கர வாகனங்கள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளன.

இந்த ஏலத்தில் கலந்து கொள்பவா்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயா் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவா் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா் உரிய தொகையை செலுத்தத் தவறினால் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவுச் சான்று வழங்க இயலாது.

பொது ஏலத்தில் காவல் துறை சாா்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பாா்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டுவர வேண்டும். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக் குழு அலுவலா்களால் முடிவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9786881576 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

SCROLL FOR NEXT