ர. ராஜ்குமாா் 
அரியலூர்

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Syndication

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தா.பழூரை அடுத்த காா்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் கிடா (எ) ராஜ்குமாா்(30). கஞ்சா விற்பனை, திருட்டு மற்றும் அடித்தடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவரை கடந்த இரு வாரங்களுக்கு முன் காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இவா் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பரிந்துரைபேரில், ராஜ்குமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்டக் காவல் துறையினா் வழங்கினா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT