தமிழக முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் பணிகளுக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 3,625 போ் எழுதினா்.
அரியலூா் மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற்ற தோ்வை எழுத 3,875 விண்ணப்பித்திருந்த நிலையில், 3,625 போ் எழுதினா். 250 போ் வரவில்லை.
தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு செய்தாா்.