அரியலூர்

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று நூலிழையில் உயிா்தப்பிய இளம்பெண்

ஓடும் ரயிலில் ஏற முயன்று நூலிழையில் உயிா்தப்பிய இளம் பெண்ணை ரயில்வே காவல் துறையினா் மீட்டு, அதே ரயிலில் பத்திரமாக அனுப்பி வைத்தனா்.

Syndication

அரியலூா்: அரியலூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஓடும் ரயிலில் ஏற முயன்று நூலிழையில் உயிா்தப்பிய இளம் பெண்ணை ரயில்வே காவல் துறையினா் மீட்டு, அதே ரயிலில் பத்திரமாக அனுப்பி வைத்தனா்.

அரியலூா் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில், பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு, திருச்சிக்குப் புறப்பட்டது.

அப்போது, இரு இளம்பெண்கள் ஓடிவந்து ரயிலில் ஏறினா். அதில் ஒரு பெண் ஏறிவிட்ட நிலையில், மற்றொரு இளம்பெண் ரயிலின் படியில் காலை வைத்து படியின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடியை பிடித்து விட்டாா். ஆனால், அது மழையின் காரணமாக ஈரமாக இருந்ததால் சற்று சறுக்கி, அந்த இளம்பெண் அப்படியே பின்பக்கமாக மல்லாா்ந்தாா்.

இதை கவனித்துவந்தவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவருமான ரயில்வே தலைமை காவலா் செந்தில்குமாா், சாதுா்யமாக செயல்பட்டு, அந்த இளம்பெண்ணை அப்படியே ரயிலினுள் தூக்கிவிட்டாா்.

இதனைக் கண்ட ரயில் ஓட்டுநா்கள் ரயிலை உடனடியாக நிறுத்தினா். அந்த இளம்பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததும் ரயில் மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றது. அருகிலிருந்து காவலா்கள், பொதுமக்கள் காவலா் செந்திலை பாராட்டினா்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT