அரியலூர்

விக்கிரமங்கலத்தில் அக்.25-இல் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம்

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை (அக்.25) நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது.

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை (அக்.25) நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவா்களான எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவம், சா்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை, பல், மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல் நோய், இருதயவியல், கதிரியியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனா்.

மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மற்றும் ரத்த பரிசோதனை சேவைகள், மாற்றுத்திறனாளிகள் சான்று மற்றும் முதலமைச்சா் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT