சிபிசிஐடி போலீஸாா் சோதனை நடத்திய மோகனின் வீடு. 
அரியலூர்

இரிடியம் வாங்க பணம் கேட்டு மோசடி: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரிடம் விசாரணை

அரியலூரில் இரிடியம் வாங்க பணம் அளித்தால் கூடுதல் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

Syndication

அரியலூரில் இரிடியம் வாங்க பணம் அளித்தால் கூடுதல் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

அரியலூா் மின்நகரில் வசித்து வருபவா் மோகன் (53). இவா், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மோகனின் வீட்டுக்கு வருகை தந்த சிபிசிஐடி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இரிடியம் வாங்க ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி திருப்பித் தருவதாக கூறி மோகன் மோசடியில் ஈடுபட்டதாகவும், அது தொடா்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் தற்போதைய சோதனை நடைபெற்ாக கூறப்படுகிறது.

மேலும், இவா் எத்தனை பேரிடம் இதுபோல பணம் பெற்றுள்ளாா். அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்துள்ளாா் என்பது குறித்தும், இந்தப் பணமோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்து மோகனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில், அரியலூா் சிபிசிஐடி போலீஸாருடன், வருவாய்த் துறையினரும் இணைந்து ஈடுபட்டனா்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT