அரியலூர்

இருசக்கர வாகனங்கள் திருடிய 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஜமீன் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் கடந்த வாரம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மணிகண்டனின் வாகனத்தை திருடியது ஆனதண்டாபுரம் சாலையைச் சோ்ந்த பாலு மகன் ராம்கி (32) என்பது தெரியவந்தது.

இதேபோல் ஆமணக்கந்தோண்டி பகுதியில் ஒருவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (27) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT